மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஆளுநரிடம் உரிமை கோரினார் பொம்மை

கர்நாடக முதல்வராகப் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து பசவராஜ் பொம்மை உரிமை கோரினார்.

News image
Updated On :27 ஜூலை 2021, 4:18 pm

DIN


கர்நாடக முதல்வராகப் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து பசவராஜ் பொம்மை உரிமை கோரினார்.

கர்நாடக பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு, ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்தித்த பசவராஜ் பொம்மை, பாஜகவின் சட்டப்பேரவைக் குழு புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அளித்தார். மேலும் தன்னை முதல்வராகப் பதவியேற்க அழைப்பு விடுக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். 

அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட், புதிய முதல்வராகப் பதவியேற்க பசவராஜ் பொம்மைக்கு அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

முன்னதாக, கர்நாடக முதல்வராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த பி.எஸ். எடியூரப்பா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.