காஷ்மீர் : கனமழையால் 6 பேர் பலி , 40 பேர் மாயம்
காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹான்சன் கிராமத்தில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் சிக்கி 6 பேர் வரை உயிரிழந்தனர்.


காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹான்சன் கிராமத்தில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் சிக்கி 6 பேர் வரை உயிரிழந்தனர்.
இதுகுறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷபாத் உசைன் அளித்த தகவலில் " திடீர் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி ஹான்சன் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள் , இறந்தவர்களின் உடல்கள் மீட்டப்பட்டது. படுகாயங்கள் அடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறோம் . மேலும் மாயமான 40 பேரை தேடும் பணியில் உள்ளூர் காவல்துறையும் , தேசிய பேரிடர் மீட்புப் படையும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள் என்றும் 25 கி.மீ வரை தேடுதல் பணியை மேற்கொண்டிருக்கிறோம் " எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...