கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 12 எம்.பி.க்கள் இடைநீக்கம்: தகவல்

​மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:46 am

DIN


மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் பகுதியாக காகிதங்களை வீசி, மரியாதை குறைவாக நடந்துகொண்ட காரணத்திற்காக 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர குர்ஜீத் சிங், டிஎன் பிரதாபன், ரவ்னீத் சிங், ஹிபி ஈடன், சப்தகிரி சங்கர், வி வைத்திலிங்கம், ஏம் ஆரிப் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.