வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கேரள, மகாராஷ்டிர பயணிகள் ஆர்டி-பிசிஆர் முடிவைக் கட்டாயம் காட்ட வேண்டும்: கர்நாடகம்

கேரளம், மகாராஷ்டிரத்திலிருந்து வருவோர் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவின் சான்றிதழைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என கர்நாடக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜூலை 2021, 3:36 pm

DIN


கேரளம், மகாராஷ்டிரத்திலிருந்து வருவோர் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவின் சான்றிதழைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என கர்நாடக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலிருந்து வருபவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியையாவது செலுத்தியிருக்க வேண்டும் என்ற நடைமுறையையே கர்நாடக அரசு பின்பற்றி வந்தது.

இந்த நடைமுறை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"அதிகபட்சம் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் பயணிக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் எந்தவொரு பயணியும் நோய்த் தொற்றுடன் மாநிலத்துக்குள் நுழையக் கூடாது என்பதை ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பேருந்து நடத்துனர்களும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகே பயணிகளை அனுமதிக்க வேண்டும்.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை ஆய்வு செய்ய கேரளம் மற்றும் மகாராஷ்டிர எல்லைகளில் கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலிருந்து கர்நாடகத்துக்கு தினசரி பயணிக்கும் மாணவர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோருக்கும் இது கட்டாயம்.

மருத்துவக் காரணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.