மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பஞ்சாப் : இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களின்   எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

News image

பஞ்சாப் : இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை

Updated On :31 ஜூலை 2021, 7:11 am

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களின்   எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்  இருவர் உயிரிழந்தனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு எல்லைக் கண்காணிப்பில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் திடீரென இருவர் எல்லையத் தாண்டி  வந்துகொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். 

 அவர்களை துரத்திச் சென்று பலமுறை எச்சரித்தும் கேட்காமல் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ஊடுருவிய இருவரும் பலியானார்கள்.

மேலும் அவர்கள் யார் என்கிற விசாரணையை மேற்கொண்டிருப்பதாகவும் , அப்பகுதியை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.