உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ஆகஸ்டில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி: ஐசிஎம்ஆர்

ஜூலை மத்தியில் அல்லது ஆகஸ்டில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2021, 12:56 pm

DIN


ஜூலை மத்தியில் அல்லது ஆகஸ்டில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு புதன்கிழமை வெளியிட்டது. 

அப்போது ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தடுப்பூசிகள் குறித்து பேசியது:

"பொது முடக்கத்தைப் படிப்படியாகத் தளர்த்துவது பெரும் பரவலுக்கு வழிவகுக்காது. எனினும், தடுப்பூசி செலுத்துவது முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தும் விகிதம் 70 சதவிகிதத்துக்கு உயர்த்தப்பட வேண்டும்.

தடுப்பூசிக்கு எவ்விதப் பற்றாக்குறை இல்லை. ஜூலை மத்தியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். டிசம்பருக்குள் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.