உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கேரளத்தில் புதிதாக 19,760 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 19,760 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2021, 1:50 pm

DIN


கேரளத்தில் புதிதாக 19,760 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மாநிலத்தில் புதிதாக 19,760 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,30,594 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 15.13 சதவிகிதம். இதுவரை மொத்தம் 1,99,26,522 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 

கடந்த நாள்களில் 194 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,009 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 104 பேர். 18,393 பேர் தொடர்பிலிருந்ததன்மூலமே பாதிக்கப்பட்டுள்ளனர். 1,189 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று இருப்பது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் 24,117 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,34,502 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,02,426 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் 7,64,008 பேர் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.