தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லியில் கருப்புப் பூஞ்சைக்கு 1,044 பேர் பாதிப்பு; 89 பேர் பலி

தில்லியில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

News image

தில்லியில் கருப்புப் பூஞ்சைக்கு 1,044 பேர் பாதிப்பு; 89 பேர் பலி

Updated On :3 ஜூன் 2021, 6:41 am

DIN


தில்லியில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

எனினும் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 1,044 பேர் கருப்பூப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

கருப்புப் பூஞ்சை தொற்றிலிருந்து 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89-ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார். 

இதனால் தில்லியில், கருப்புப் பூஞ்சைக்கு கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் இறப்பது தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.