கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

புணே விமான நிலையத்திலிருந்து இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் அனுப்பிவைப்பு

நாடு முழுவதும் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் புணே விமான நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2021, 2:13 pm

DIN

நாடு முழுவதும் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் புணே விமான நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சீரம் மையம் தயாரிக்கும் கோவிஷீ்ல்ட் தடுப்பூசிகளை நாடு முழுவதும் விநியோகிப்பதில், புணே விமான நிலையம் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் கடந்த மே 27ஆம் தேதி வரை, 10,000க்கும் மேற்பட்ட கொவைட் தடுப்பூசி டோஸ்கள், 9052 பெட்டிகளில் (சுமார் 2,89,465 கிலோ எடையில்) புணே விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல நகரங்களுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் தடையற்ற போக்குவரத்தை, புணே விமான நிலைய குழுவினர் உறுதி செய்தனர். இந்த விமான நிலையம் 2,16,000 டோஸ் கொவைட் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பியுள்ளது. இது தவிர கொவைட் பரிசோதனை உபகரணங்களையும் தில்லி மற்றும் கொல்கத்தாவுக்கு புணே விமான நிலையம் அனுப்பியுள்ளது.

மேலும், மத்திய, மாநில அரசுகளின் கொவைட் தடுப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி பயணிகளின் பாதுகாப்பான பயணத்தையும் புணே விமான நிலையம் உறுதி செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.