தில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: ராகுல் காந்தி கருத்து
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் நேர்மையாக போராடி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் நேர்மையாக போராடி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த 180 நாள்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் விவசாயிகள் இறந்து வருகின்றனர். எனினும் அவர்கள் நேர்மையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...