தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மும்பை மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை: மகாராஷ்டிர முதல்வர்

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை விரைந்து வெளியேற்றுமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். 

News image

உத்தவ் தாக்கரே

Updated On :9 ஜூன் 2021, 9:57 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை விரைந்து வெளியேற்றுமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். 

மகாராஷ்டிரத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் பல்கார் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

முக்கிய சாலைகளிலும், தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்குவதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.  

அடுத்த மூன்று நாள்களுக்கு தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடலோரப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், கரோனா சிகிச்சை முகாம்கள் மழை நீரால் பாதிக்கப்படாதவாறு கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.