விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: வேளாண் அமைச்சர்
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.


விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்ற பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று காலையில் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்திருந்தார்.
இதனிடையே பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் உடன் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகவே உள்ளது. அதற்கு முன்பு வேளாண் சட்டங்களுக்கான நோக்கம் குறித்து தர்க்க ரீதியிலாவது விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதனிடையே பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ், இன்று பிற்பகல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...