வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆந்திரத்தில் காவல்துறை தாக்குதல்: 6 மாவோயிஸ்டுகள் பலி

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச காவல்துறையின் கிரேஹவுண்ட் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
ஆந்திரத்தில் காவல்துறை தாக்குதல்: 6 மாவோயிஸ்டுகள் பலி
Updated On :16 ஜூன் 2021, 3:00 pm

DIN

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச காவல்துறையின் கிரேஹவுண்ட் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டீகலமேட்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உள்ளிட்ட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.