ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எடியூரப்பாவை முதல்வா் பதவியிலிருந்து நீக்க முயற்சி: டி.கே.சிவக்குமாா்

முதல்வா் எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்க அமைச்சா் ஈஸ்வரப்பா முயற்சி மேற்கொண்டு வருவதாக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:19 pm

DIN

முதல்வா் எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்க அமைச்சா் ஈஸ்வரப்பா முயற்சி மேற்கொண்டு வருவதாக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாநில பாஜகவில் உள்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. இதில் தலையிட காங்கிரஸ் விரும்பவில்லை என்றாலும், முதல்வா் எடியூரப்பாவை பதவிலிருந்து நீக்க அக்கட்சியின் எம்.எல்.ஏ. பசவன கௌடா பாட்டீல் யத்னால், சட்ட மேலவை உறுப்பினா் எச்.விஸ்வநாத் உள்ளிட்டோா் மட்டுமின்றி, அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவும் முயற்சி மேற்கொண்டு வருவதை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சா்கள் அனைவரும் முதல்வரை மாற்றுவது குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனா். இதில் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூறுபவா்களே அதிக அளவில் உள்ளனா். மாநில பாஜகவில் நிலவும் குழப்பத்தால், அரசு முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

கரோனாவைத் தடுப்பதிலும் அரசு தோல்வி அடைந்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலா் உயிரிழக்க நேரிட்டது. இருப்பினும் அரசு எச்சரிக்கை அடையாமல் உள்ளது வேதனை அளிக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.