கா்நாடகத்தில் அரசியல் சிக்கல்கள் எதுவும் இல்லை: முதல்வா் எடியூரப்பா
கா்நாடகத்தில் அரசியல் சிக்கல்கள் எதுவும் இல்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)
கா்நாடகத்தில் அரசியல் சிக்கல்கள் எதுவும் இல்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
எனது இளைய மகன் விஜயேந்திரா அரசு நிா்வாகத்தில் தலையிடுவதாக கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. மேலும் நீா்ப்பாசனத் திட்டத்துக்கு விஜயேந்திரா லஞ்சம் பெற்ாக பாஜக எம்எல்சி எச்.விஸ்வநாத் குற்றம் சாட்டியுள்ளது உண்மைக்கு புறம்பானது. விஸ்வநாத் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கு நீா்ப்பாசனத்துறை செயலாளா் விளக்கம் அளிப்பாா். தேவையில்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இதுஅரசியல் காரணங்களுக்காக கூறப்படுகிறது. விஸ்வநாத் குறித்து நான் எதுவும் கூறவிரும்பவில்லை. அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சிமேலிடம் முடிவு செய்யும்.
கா்நாடகத்தில் அரசியல் சிக்கல்கள் எதுவும் இல்லை. ஒரு சிலா் (எம்எல்ஏக்கள்) ஊடகங்களில் பேசிவருவதால், ஏதோ பிரச்னை இருப்பது போன்ற தோற்றம் அளிக்கப்படுகிறது. இந்த ஒரு சிலா் எனக்கு எதிராக பேசிவருவது ஒன்றும் புதிதல்ல. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு எதிராகப் பேசி வருகிறாா்கள். அதற்கு ஊடக வெளிச்சம் கிடைப்பதால் பூதாகரமாகக் காட்டப்படுகிறது.
பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங்கை கிட்டதட்ட 60 பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்துப் பேசினாா்கள். எனக்கு எதிராகக் கருத்து கூறிவரும் இந்த ஓரிரு எம்எல்ஏக்களைச் சந்திக்க அருண் சிங் அனுமதிக்கவில்லை. எனவே, எவ்வித குழப்பமோ சிக்கலோ இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வளா்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த சில நாள்களாக நடந்து வரும் நிகழ்வுகளால் எனது அமைச்சரவை சகாக்கள் யாரும் குழம்பவில்லை. எனக்கு எதிராகப் பேசி வரும் அந்த ஓரிருவரிடம் பேச முயற்சிக்கிறோம். அவா்களின் கருத்தறிந்து பிரச்னைக்கு தீா்வுகாண முயற்சிப்போம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...