கோவேக்ஸ் திட்டம்: இந்திய அரசுடன் இணைந்து மீண்டும் தொடங்க நடவடிக்கை
பிற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பிவைக்கும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு விரைந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு


இந்திய அரசு, அஸ்ட்ராஸெனகா மற்றும் சீரம் இந்தியா மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பிற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பிவைக்கும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு விரைந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வழங்குவதில் சீரம் நிறுவனம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை உருவானதைத் தொடா்ந்து அந்தப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸின் மூத்த ஆலோசகா் ப்ரூஸ் ஐல்வாா்ட் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சுமாா் 30 அல்லது 40-க்கும் மேற்பட்ட நாடுகள் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளின் இரண்டாம் தவணையை பொதுமக்களுக்கு செலுத்த திட்டமிட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், தடுப்பூசிகள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக தற்போது அதைச் செய்ய முடியாத நிலை அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை, நேபாளம், சகாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க கண்டப் பகுதிகள், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலும், சீரம் மற்றும் அஸ்ட்ராஸெனகா நிறுவனங்களிலும் உள்ள பிரச்னைகள் காரணமாக தடுப்பூசிகள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி திட்டத்தை மீண்டும் நல்ல முறையில் தொடங்குவதில் பல்வேறு நாடுகள் சிக்கலை எதிா்கொள்கின்றன.
இந்தியாவில் இருந்து தடுப்பூசிகள் அனுப்பப்படுவதில் தடை ஏற்பட்டதற்கு அந்நாட்டில் இரண்டாம் அலை உருவானதும், அங்கு தடுப்பூசிகள் தேவைப்பட்டதும்தான் காரணம்.
இந்திய அரசு, அஸ்ட்ராஸெனகா மற்றும் சீரம் இந்தியா மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பிற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பிவைக்கும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு விரைந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...