சரத் பவார், பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்திப்பு

​தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக திங்கள்கிழமை சந்தித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் திங்கள்கிழமை சந்தித்துக்கொண்டனர்.

கடந்த 11-ம் தேதி ஏற்கெனவே இருவரும் சந்தித்த நிலையில், இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக மீண்டும் திங்கள்கிழமை சந்தித்தனர்.

பாஜகவை எதிர்கொள்ள தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கப்படலாம் என்று பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது.

சரத் பவார் இல்லத்தில் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நடைபெற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், திரிணமூல் தலைவர் யஷ்வந்த் சின்ஹா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஜா மற்றும் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரும் சரத் பவாரை செவ்வாய்க்கிழமை சந்திக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சரத் பவார், பிரசாந்த் கிஷோர் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், அதன்பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டார். இந்தாண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கும், தமிழகத்தில் திமுகவுக்கும் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைய சரத் பவார் முக்கியப் பங்கு வகித்ததும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com