காங்கிரஸைப் புறக்கணித்து மூன்றாவது அணி? தேசியவாத காங்கிரஸ் மறுப்பு
காங்கிரஸைப் புறக்கணித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மூன்றாவது அணி அமைப்பதாக வெளியாகும் தகவல்கள் தவறானது என அக்கட்சியின் மூத்த தலைவர் மஜீத் மேமன் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸைப் புறக்கணித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மூன்றாவது அணி அமைப்பதாக வெளியாகும் தகவல்கள் தவறானது என அக்கட்சியின் மூத்த தலைவர் மஜீத் மேமன் தெரிவித்துள்ளார்.
சரத் பவார் இல்லத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் பங்கேற்ற மாபெரும் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. 2024 தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து சரத் பவார் மூன்றாவது அணியை உருவாக்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல்கள் தவறானது என மஜீக் மேமன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
"நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதாரம், சமூக சூழல் மேம்பட ராஷ்டிர மஞ்ச் அமைப்பு எந்த வகையில் பங்களிக்கலாம் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கருத்துகள் கேட்டறியப்பட்டன. ஜாவேத் அக்தர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏபி ஷாவும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இது அரசியல் நிகழ்வு அல்ல.
காங்கிரஸ் தலைவர்கள் விவேக் தன்கா, மணீஷ் திவாரி, கபில் சிபல், அபிஷேக் சங்வி, சத்ருகன் சின்ஹா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க முடியாததற்கு சிலர் நியாயமான காரணங்களைக் கூறினர். காங்கிரஸ் இல்லாமல் மாபெரும் எதிர்க்கட்சி அமையப்போவதாக இருக்கும் பார்வை தவறானது.
பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக சரத் பவார் ராஷ்டிர மஞ்ச் கூட்டத்தைக் கூட்டியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது முற்றிலும் தவறானது. இந்தக் கூட்டம் பவார் இல்லத்தில் நடைபெற்றது, ஆனால், கூட்டத்தை அவர் கூட்டவில்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.
இந்தக் கூட்டத்துக்கு ராஷ்டிர மஞ்ச் தலைவர் யஷ்வந்த் சின்ஹா அழைப்பு விடுத்தார். ராஷ்டிர மஞ்ச் பணியாளர்கள் மற்றும் நிறுவன உறுப்பினர்களால் கூட்டம் நடத்தப்பட்டது. சரத் பவார் மிகப் பெரிய அரசியல் நகர்வை எடுத்துவைப்பதாகவும், காங்கிரஸைப் புறக்கணிப்பதாகவும் வெளியாகும் தகவல்கள் தவறானது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...