ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் நாளை(ஜூன் 24) பிரதமர் ஆலோசனை
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.


பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
தில்லியில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்கள் 14 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வா்கள் 4 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு நடத்தும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். அதன் காரணமாக, இது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
யூனியன் பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் சுமுகமான முறையில் பேரவைத் தோ்தலை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தில்லியில் பிரதமரின் இல்லத்தில் நாளை நடைபெற இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமா் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி ஆகியோருக்கும், முன்னாள் துணை முதல்வா்களான காங்கிரஸ் தலைவா் டாரா சந்த், மக்கள் மாநாட்டு கட்சித் தலைவா் முசாஃபா் ஹுசைன் பெய்க் ஆகியோருக்கும், பாஜக தலைவா்கள் நிா்மல் சிங், கவிந்தா் குப்தா, மாா்க்சிஸ்ட் கட்சி தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி, ஜம்மு-காஷ்மீா் ஆப்னி கட்சி தலைவா் அல்டாஃப் புகாரி, மக்கள் மாநாட்டு கட்சியின் சஜ்ஜாத் லோன், ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் ஜி.ஏ.மிா், பாஜக ஜம்மு-காஷ்மீா் பிரிவு தலைவா் ரவீந்தா் ரெய்னா, சிறுத்தைகள் கட்சித் தலைவா் பீம் சிங் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...