பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜம்மு-காஷ்மீரில் மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடைய வேண்டும்: பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீரின் மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடைந்தால் தான் தேர்தல் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :24 ஜூன் 2021, 3:29 pm

DIN


ஜம்மு-காஷ்மீரின் மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடைந்தால் தான் தேர்தல் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தினார். 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது. இதனால், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பிரதமர் மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிப் பாதையை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடனான இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியமானது. 

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்துவதே முதன்மையானது. மறுவரையறை பணிகள் விரைவாக நடைபெறவேண்டும். அப்போதுதான் தேர்தல் நடைபெற்று ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப் பாதைக்கு பலம் சேர்க்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும்.

நமது ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமே கருத்து பரிமாறிக்கொள்ளும் திறன் இருப்பதுதான். ஜம்மு-காஷ்மீர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் ஜம்மு-காஷ்மீருக்கு அரசியல் தலைமை வழங்கி தங்களது விருப்பங்கள் முறையாக நிறைவேறுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைவர்களிடம் கூறினேன்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.