பாட்னாவில் கனமழை: சட்டப்பேரவை, மருத்துவமனைகளில் வெள்ளம்

பிகார் தலைநகர் பாட்னாவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் சட்டப்பேரவை, மருத்துவமனை வளாகங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பிகார் துணை முதல்வர் ரேணு தேவி வீட்டின் முன்பு தேங்கிய வெள்ள நீர்
பிகார் துணை முதல்வர் ரேணு தேவி வீட்டின் முன்பு தேங்கிய வெள்ள நீர்
Updated on
1 min read

பிகார் தலைநகர் பாட்னாவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் சட்டப்பேரவை, மருத்துவமனை வளாகங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழை காரணமாக பாட்னா விமான நிலையம், துணை முதல்வர் ரேணு தேவி வீட்டின் முன், நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

நேற்று இரவு முதல் 145.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த 72 மணிநேரத்திற்கு பலத்த மழை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதனால் பாட்னா, போஜ்பூர், முசாபர்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com