அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஹரியாணாவில் ஜூலை 5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

ஹரியாணாவில் ஜூலை 5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :27 ஜூன் 2021, 2:58 pm

DIN

ஹரியாணாவில் ஜூலை 5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஒருசில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஹரியாணாவில் ஜூலை 5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உத்தரவுப்படி, அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன. 

அதே நேரத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. 50 சதவீத இருக்கையுடன் உணவகங்கள் மற்றும் பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஹோட்டல் மற்றும் உணவகங்களில் இருந்து இரவு 10 மணி வரை உணவு டெலிவரிக்கு அனுமதிக்கப்படுகிறது. மத வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. அதுவும் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.

அதே நேரத்தில் கார்ப்பரேட் அலுவலகங்கள் நூறு சதவீதம் பேருடன் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. திருமணங்களில் கூட்டங்கள், இறுதி சடங்குகளில் 50 பேர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றன. திருமண ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது. உடற்பயிற்சி கூடங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.