நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம்: நிதி அமைச்சரின் அறிவிப்புகள் குறித்து பிரதமர்

குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சரின் அறிவிப்புகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

News image
நரேந்திர மோடி
Updated On :28 ஜூன் 2021, 3:54 pm

DIN

குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சரின் அறிவிப்புகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறிப்பாக சேவைகள் அதிகம் சென்றடையாத பகுதிகளில் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்தி, மருத்துவ உள்கட்டமைப்பில் தனியார் முதலீட்டை ஊக்குவித்து, முக்கிய மனிதவளங்களை அதிகரிக்கும். குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நமது விவசாயிகளுக்கு உதவ முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது செலவுகளை குறைத்து, வருமானத்தை அதிகரித்து, அதிகளவிலான உறுதிக்கும், வேளாண் செயல்பாடுகளின் நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்க பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறு தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரிவோர் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை தக்கவைப்பதோடு மட்டுமில்லாமல் அவற்றை மேலும் விரிவாக்குவதற்கு தேவையான கூடுதல் ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாவுடன் இணைந்துள்ளோருக்கு உதவ நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் பொருளாதார செயல்பாடுகளுக்கு புத்தாக்கம் அளித்து, உற்பத்தி & ஏற்றுமதிகளை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
விளைபயனுடன் இணைந்த மின்சார விநியோக திட்டம், பொது-தனியார்-கூட்டு திட்டங்கள் மற்றும் சொத்தை பணமாக்குதலுக்கான ஒழுங்குப்படுத்தப்பட்ட செயல்முறைகள், சீர்திருத்தங்களுக்கான நமது அரசின் தொடர் உறுதியை பிரதிபலிக்கின்றன.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.