உத்தரகண்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: உடற்பயிற்சி கூடங்கள், சந்தைகள் திறக்க அனுமதி
உத்தரகண்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 6 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


உத்தரகண்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 6 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலமும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் 6 நாள்களுக்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய உத்தரவுகளிபடி, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் 50 சதவீத நபர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாள்களிலும் சந்தைகள் இயங்கலாம். இருப்பினும், முசோரி மற்றும் நைனிடாலில், சந்தைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்கலாம்.
மாறாக செவ்வாய்கிழமை மூடப்படும். அதேசமயம் பள்ளி குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து மூடப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரகண்டில் நேற்று ஒரேநாளில் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் பலியானார்கள். 2465 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...