
ஜம்மு விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜம்மு விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் நேற்று முன் தினம் (ஜூன் 27) விமானப்படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா்.
இந்த தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், லாடகிற்கு 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், லடாகில் உள்ள நிலவரம் குறித்தும் விவரிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.