ஜூலை 19 முதல் மழைக்காலக் கூட்டத்தொடர்: அமைச்சரவைக் குழு பரிந்துரை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை குறைந்ததையடுத்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், கரோனா தடுப்பூசி, கரோனா மூன்றாம் அலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...