பணி நிரந்தரம்: பஞ்சாபில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பஞ்சாப் போக்குவரத்து உழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பஞ்சாப் போக்குவரத்து உழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டியாலா பகுதியில் ஒப்பந்த ஊழியர்களுடன் மற்ற போக்குவரத்து ஊழியர்களும் சாலையில் அமர்ந்து போராடியதால், பயணிகள் அவதியடைந்தனர்.
பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படாததால் மாநிலத்தில் பேருந்து போக்குவரத்து முடங்கியது. மாநில அரசின் கவனத்தை ஈர்க்க மூன்று நாள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், முதல்வர் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...