விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தேசிய மருத்துவர்கள் தினம்: பிரதமர் மோடி நாளை உரை

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜூன் 2021, 12:47 pm

DIN


தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார். 

ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி மருத்துவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களின் முயற்சிகளை எண்ணி நாடே பெருமை கொள்கிறது. ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு உரையாற்றவுள்ளேன்."

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மருத்துவர்களின், மருத்துவப் பணியின் முக்கியத்துவம் உலகளவில் உணரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.