மேற்கு வங்கத்தில் வசிக்கும் பிகார் மக்கள் வளர்ச்சிக்கே வாக்களிப்பார்கள்: திவாரி
மேற்கு வங்கத்தில் வசிக்கும் பிகார் மக்கள் வளர்ச்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


மேற்கு வங்கத்தில் வசிக்கும் பிகார் மக்கள் வளர்ச்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பிகாரைச் சேர்ந்த வடகிழக்கு தில்லி எம்.பி. திவாரி இதுபற்றி கூறியது:
"பிகார் தலைவர்கள் தங்களது மக்களை மற்ற மாநிலங்களில் வாக்கு வங்கியாகப் பயன்படுத்தக் கூடாது. பிகார் தேர்தலில் இருந்து தேஜஸ்வி யாதவ் பாடம் கற்க வேண்டும். அங்கு வளர்ச்சிக்கு ஆதரவாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் வசிக்கும் பிகார் மக்கள் திரிணமூல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை தோல்வியில்தான் முடியும். காரணம், அவர்கள் பாஜகவுக்கும் வளர்ச்சிக்கும்தான் வாக்களிப்பார்கள்" என்றார் அவர்.
மேற்கு வங்க பேரவைத் தேர்தல் மார்ச் 27-இல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். இதன்பிறகு, மம்தா பானர்ஜிக்கு முழு ஆதரவை அளிப்பதுவே தங்களுடைய கட்சியின் நிலைப்பாடு என அவர் கூறினார். எனினும், திரிணமூல் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இந்தத் தேர்தலில் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளராக மனோஜ் திவாரி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...