இந்நிலையில், அமைச்சரை எதிா்க்க அஞ்சிய அந்த ஏழை பெண், திங்கள்கிழமை மனித உரிமை ஆா்வலா் தினேஷ் என்பவரை தொடா்பு கொண்டு பாலியல் தொடா்பான குறுந்தகடைக் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து தினேஷ் கல்லஹள்ளி வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி இளம்பெண்ணுடன் பாலியல் தொடா்பில் மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளி ஈடுபட்டதாகக் கூறி பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட மாநகரக் காவல் ஆணையா் கமல்பந்த் புகாரை கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து தனது வழக்குரைஞா்களுடன் விவாதித்து, கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் தினேஷ் கல்லஹள்ளி புகாா் அளித்துள்ளார்.