ஜார்க்கண்ட் : மாவோயிஸ்டுகள் தாக்குதலில் காவல் அதிகாரி உள்பட மூவர் பலி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஹோயாஹட்டு கிராமத்தில் வியாழக்கிழமை காலை ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் காவல் அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர்.
மேலும் இந்தத் தாக்குதலில் 5 பாதுகாப்புப்படை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகளை குற்றம்சாட்டியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து மேலும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...