கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் நிதின் கட்கரி

நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். 

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கரோனா முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 

கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்றார். 

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா, எஸ்.ஜெய்சாகர், ஜிதேந்திர சிங் உள்பட பல மத்திய அமைச்சர்களும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com