எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மம்தா மீது தாக்குதல்: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அறிக்கை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

News image
மம்தா மீது தாக்குதல்: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
Updated On :10 மார்ச் 2021, 4:14 pm

DIN

மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அறிக்கை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நடைபெற உள்ள மேற்குவங்கத் தேர்தலில் ஆளும் திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் புதன்கிழமை மம்தா வேட்புமனு தாக்கல் செய்தார். 

அதனைத் தொடர்ந்து நந்திகிராமில் உள்ள துர்கா கோயிலில் வழிபட்ட பின் வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தள்ளிவிட்டதாக  மம்தா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்தார். 

இந்த தாக்குதல் சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் யாரும் தனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதல் சம்பவத்தால் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமை செயலர் அறிக்கை அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.