பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

துபையில் காணாமல் போன இந்தியர் சடலமாக மீட்பு

துபையில் ஒரு சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இந்தியரின் சடலம் கைப்பற்றப்பட்டதாக துபை காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

துபையில் காணாமல் போன இந்தியர் சடலமாக மீட்பு

Updated On :10 மார்ச் 2021, 6:01 am


மங்களூரு: துபையில் ஒரு சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இந்தியரின் சடலம் கைப்பற்றப்பட்டதாக துபை காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர், முத்தாலிப் என்றும், அவர் கர்நாடக மாநிலம் பந்த்வால் தாலுகா, நர்ஷா பொலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

துபையில் பணியாற்றி வந்த முத்தாலிப்பின் செல்லிடப்பேசி எண் ஒரு சில நாள்களுக்கு முன்பு அணைத்துவைக்கப்பட்டதாகவும், அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல், குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையல், அவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதி சய்துள்ளனர்.  அல் - ரஃபா பகுதியில் கடந்த ஞாயிறன்று அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டு இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவரது உடர் துபை ரஷித் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படித்துவிட்டு, துபையில் பணியாற்றி வந்த முத்தாலிப், செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். உண்மையில் அவரது மரணத்துக்கான காரணம் பற்றி இதுவரை தகவல் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.