பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜம்மு: மனைவி, மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்ற காவலர்

ஜம்முவில் குடும்பச் சந்தையில், காவலர் ஒருவர் தனது மனைவி, மாமனார், மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஜம்மு: மனைவி, மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்ற காவலர்

Updated On :10 மார்ச் 2021, 5:56 am


ஜம்மு: ஜம்முவில் குடும்பச் சந்தையில், காவலர் ஒருவர் தனது மனைவி, மாமனார், மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த ராஜேந்திர குமார், நேற்று இரவு தனது மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது மனைவி மற்றும் அவரது குடும்பத்தாருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இதில், மனைவி சீமா, மாமனார் ரமேஷ் குமார், மாமியார் ராஜ் குமாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீட்டிலிருந்த மேலும் இருவர் ஓர் அறையில் சென்று ஒளிந்து கொண்டதால் நூலிழையில் தப்பினர்.

மனைவி மற்றும் அவர்களது பெற்றோரை சுட்டுக் கொன்று விட்டு தப்பிய ராஜேந்திர குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

உடனடியாக உடல்கள் கைப்பற்றப்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டது. அங்கு அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.