மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆக்ரா சாலை விபத்தில் 9 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று டிராக்டருடன் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.

News image

ஆக்ரா சாலை விபத்தில் 9 பேர் பலி

Updated On :11 மார்ச் 2021, 6:00 am


நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று டிராக்டருடன் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து காலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த எஸ்யுவி வாகனம், சாலையைக் கடக்கும் போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் டிராலி மீது மோதியது. இதில் எஸ்யுவி வாகனத்தில் வந்த 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 9 பேர் உயிரிழந்துவிட்டனர். 

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.