அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மருத்துவ செலவுக்கு அஞ்சி மாற்றுத் திறனாளி சிறுமியைக் கொன்ற குடும்பம்

கர்நாடகத்தில் மருத்துவ செலவுக்கு அஞ்சி 2 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை குடும்பமே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

News image

கோப்புப்படம்

Updated On :13 மார்ச் 2021, 0:23 pm IST

கர்நாடகத்தில் மருத்துவ செலவுக்கு அஞ்சி 2 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை குடும்பமே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியில் சங்கர், மானசா தம்பதியினருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.

மாற்றுத் திறனாளியான சிறுமிக்கு அவரது குடும்பம், மருத்து சிகிச்சை அளித்து வந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவ செலவுக்கு அஞ்சி, அவரது பாட்டி மற்றும் கொள்ளுப் பாட்டி ஆகியோர் சேர்ந்து 2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளனர்.

கிணற்றில் சிறுமி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து ஹ்காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இந்த உண்மை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் தாயார், தந்தை, பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.