மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகாரில் தீ விபத்து: சிறுமி உள்பட 5 பேர் பலி

பிகாரின் கிஷன்கஞ்சில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது சிறுமி உள்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

பிகாரில் தீ விபத்து: சிறுமி உள்பட 5 பேர் பலி

Updated On :15 மார்ச் 2021, 6:31 am

பிகாரின் கிஷன்கஞ்சில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது சிறுமி உள்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை 3 மணியளவில் சலாம் காலனியில் உள்ள அவர்களது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ஐந்து பேரும் தூங்கிக்கொண்டிருந்ததாக துணைப்பிரிவு நீதிபதி ஷாஹ்னாவாஸ் அஹ்மத் நியாஜி தெரிவித்தார்.

விபத்தில் நூர் ஆலம் மற்றும் அவரது இரண்டு மகள்கள் தௌபா, பாப்லி மற்றும் மகன்கள் ரஹ்மத் மற்றும் ஷாஹித் ஆகியோர் தீ விபத்தில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தகவல் கிடைத்ததும், தீயணைப்பு டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். உடல்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக சதர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் என்னவென்று கண்டறிய முடியவில்லை என்றும் துணைப்பிரிவு கவால்துறை அதிகாரி அன்வர் ஜாவேத் அன்சாரி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.