மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

அதிகரிக்கும் கரோனா பரவல்: முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை (மார்ச் 17) ஆலோசனை

மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து நாளை (மார்ச் 17) மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி

Updated On :16 மார்ச் 2021, 9:17 am

மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து நாளை (மார்ச் 17) மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 6-வது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.14 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் கரோனா பரவலால் முக்கிய நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.