புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை நெருங்குகிறது

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை நெருங்கியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :19 மார்ச் 2021, 10:29 am

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை நெருங்கியுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், சில மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு  புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.63 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.  

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 25,833 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 2,369 பேருக்கும், கேரளத்தில் 1,899 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களுடன் மத்திய அரசு, தொடர்ந்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

கரோனா பரிசோதனைகளை அதிகரித்து, தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் உத்திகளை பின்பற்றும்படி மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபரிடம், முதல் 72 மணி நேரத்தில் தொடர்பு கொண்ட நபர்கள் குறைந்தது 20 பேரையாவது கண்டறிந்து தனிமைப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வைரஸ் வகைகளைக் கண்டறிய, மரபணு சோதனைக்கு மாதிரிகளை அனுப்பும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் 10 பரிசோதனைக் கூடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் கூட்டத்தை குறைக்கும்படியும், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்படியும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவ உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பியது.

நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 2.71 (2,71,282) லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 18,918 பேர் குறைந்துள்ளனர்.

இன்று காலை 7 மணி வரை, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை (3,93,39,817) நெருங்கியுள்ளது.

62வது நாளான நேற்று, 22 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  

நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று  1,10,83,679-ஐ எட்டியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.