கரோனா பரவல் காரணமாக நாக்பூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூரில் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வெளிப் பயணங்களைத் பொதுமக்கள் தவிா்த்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


