கரோனா பரவலுக்கு மத்தியில் மகாராஷ்டிரத்தில் இன்று அரசுப் பணி தேர்வு
கரோனா பரவலுக்கு மத்தியில் மகாராஷ்டிரத்தில் அரசுப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வருகிறது.


கரோனா பரவலுக்கு மத்தியில் மகாராஷ்டிரத்தில் அரசுப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று(சனிக்கிழமை) ஒரேநாளில் 27,126 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே மகாராஷ்டிர அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாநில அரசு காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. கரோனா விதிமுறைகளுடன் தேர்வானது நடைபெற்று வருகிறது.
முன்னதாக இந்தத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தேர்வர்களின் எதிர்ப்பை அடுத்து, மார்ச் 21 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என தேர்வாணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அரசு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முகக்கவசங்களை அணியவும் தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...