சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நாட்டில் புதிதாக 40,715 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 199 பேர் பலி

நாட்டில் புதிதாக 40,715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 199 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :23 மார்ச் 2021, 4:36 am

நாட்டில் புதிதாக 40,715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 199 பேர் பலியாகியுள்ளனர். 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 40,715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,16,86,796 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 29,785 பேர் உள்பட தற்போது வரை 1,11,81,253 பேர் குணமடைந்துள்ளனர்

தற்போது 3,45,377 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

கரோனாவுக்கு மேலும் 199 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,60,166 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 23,54,13,233 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 9,67,459 மாதிரிகள் நேற்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.