புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு: ம.பி. முதல்வர்

மத்தியப் பிரதேசம் குவாலியரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். 

News image

முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்

Updated On :23 மார்ச் 2021, 4:10 am

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். 

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் புரானி சாவ்னி பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் பேருந்து- ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.