அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

தில்லி ஆளுநருக்கு அதிகாரம்: மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம்

தில்லி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் "தில்லி தேசியத் தலைநகர்ப் பகுதி சட்டத் திருத்த மசோதா - 2021', மாநிலங்களவையிலும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

Updated On :24 மார்ச் 2021, 11:09 pm



புது தில்லி: தில்லி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் "தில்லி தேசியத் தலைநகர்ப் பகுதி சட்டத் திருத்த மசோதா - 2021', மாநிலங்களவையிலும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. 
இந்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் நடத்திய அமளியால் அவை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது, மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  இந்த மசோதாவிற்கு ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்லாமல், காங்கிரஸ், திமுக, சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி பேசுகையில், "இந்த மசோதாவில் யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் அளிக்க திருத்தம் கொண்டு வரப்படுகிறது. தில்லி அரசின் நிர்வாகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் துணைநிலை ஆளுநரின் கருத்தைப் பெற வேண்டியது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்க்கிறோம்' என்றார். மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர் வில்சன்  பேசுகையில், "இந்தச் சட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது' என்றார்.
இறுதியில் மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 83 உறுப்பினர்கள் வாக்களிக்கத்தனர். 45 உறுப்பினர்களே எதிர்த்து வாக்களித்தனர். இதையடுத்து, மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.