தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மும்பை மருத்துவமனை தீ விபத்தில் பலி 10 ஆக உயர்வு

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பலியான நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

News image
மருத்துவமனை செயல்பட்டு வரும் மாலின் முன்பகுதி
Updated On :26 மார்ச் 2021, 10:15 am

DIN


மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பலியான நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

மும்பையில் உள்ள ட்ரீம்ஸ் மாலில் மூன்றாவது தளத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். 

இதனிடையே அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். முதலில் இந்த விபத்தில் இரு நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதன்பின்னர் வெளியான தகவலில் 10 நோயாளிகளின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து ஏற்பட்ட தனியார் மருத்துவமனை 

விபத்து ஏற்பட்ட தனியார் மருத்துவமனை 

மேலும் 70க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது 7 நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்தார். மேலும், ஒரு மாலில் இதுபோன்று மருத்துவமனை செயல்படுவது இதுவே முதல்முறையாகப் பார்ப்பதாக கூறிய அவர் விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றார். 

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர்  உத்தவ் தாக்கரே, மாலில் உள்ள மருத்துவமனை கரோனாவுக்காக தற்காலிகமாக செயல்படும் மருத்துவமனை. மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு நிலவிய காரணத்தால் தற்காலிகமாக இங்கு கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த மருத்துவமனை இங்கு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது குறித்து விசாரணை செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.