ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

அசாம்: 47 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு

அசாம் மாநிலத்தில் நாளை (மார்ச் 27) முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :26 மார்ச் 2021, 7:31 am

DIN

அசாம் மாநிலத்தில் நாளை (மார்ச் 27) முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் 12 மாவட்டங்களிலுள்ள 47 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், 47 தொகுதிகளிலும் 81 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாவும், அதில்  40,77,210 ஆண் வாக்காளர்களும், 40,32,481 பெண் வாக்காளர்களும் உள்ளனர். வாக்களிப்பதற்காக 11,537 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மூன்றுகட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற பாஜக முனைப்புக்காட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.