ஆமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்.இல் பேராசிரியர் உள்பட 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் மாணவர்கள், ஒரு பேராசிரியர் என 40 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 25 மாணவர்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தனிமையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆமதாபாத் மாநகராட்சியின் துணை சுகாதார அதிகாரி மெஹுல் ஆச்சார்யா தெரிவித்தார்.
ஐ.ஐ.எம் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பலர் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக மீண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டிலிருந்து ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வளாகத்தில் நுழைவதும் வெளியேறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது வளாகத்தில் உள்ள அனைவருக்கும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


