திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பெங்களூருவில் மார்ச் மாதத்தில் மட்டும் 470 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

பெங்களூருவில் மார்ச் மாதத்தில் மட்டும் 10 வயதுக்குள்பட்ட 470க்கும் மேற்பட்ட குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :28 மார்ச் 2021, 11:49 am

பெங்களூருவில் மார்ச் மாதத்தில் மட்டும் 10 வயதுக்குள்பட்ட 470க்கும் மேற்பட்ட குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 1 முதல் 26 ஆம் தேதி வரை பெங்களூருவில் 244 சிறுவர்கள் மற்றும் 228 சிறுமிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் குழந்தைகளிடம் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் குழந்தைகள் வெளியில் செல்வதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். 

ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பள்ளிகள் செயல்படுவதும் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த நேரத்தில் பள்ளிகள் செயல்பட்டால் குழந்தைகளிடையே கரோனா பரவல் அதிகரிக்கும் என்றும் அதனால் அதிக ஆபத்தும் உள்ளதாகவும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் பேராசிரியரும் தலைமை தொற்றுநோயியல் தலைவருமான டாக்டர் கிரிதாரா ஆர் பாபு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.