/

பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் கடைப்பிடிப்பதில்லை: மத்திய அரசு

​பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் கடைப்பிடிக்கப்படுவதில்லை என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2021, 12:22 pm


பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் கடைப்பிடிக்கப்படுவதில்லை என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

"நாடு முழுவதிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர விகிதம் 5.65 சதவிகிதம். மகாராஷ்டிரத்தில் இதன் வாராந்திர விகிதம் 23 சதவிகிதம். பஞ்சாபில் 8.82 சதவிகிதம், சத்தீஸ்கரில் 8 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 7.82 சதவிகிதம், தமிழகத்தில் 2.50 சதவிகிதம், கர்நாடகத்தில் 2.45 சதவிகிதம், குஜராத்தில் 2.2 சதவிகிதம், தில்லியில் 2.04 சதவிகிதம்.

இந்த மாநில பிரதிநிதிகளிடம் பேசினோம். கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்போது பரிசோதனை எண்ணிக்கையை ஏன் அதிகரிக்கவில்லை என்றோம். ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளைக் கொண்டு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம்.

பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் கடைப்பிடிக்கப்படவில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், வீட்டில் தனிமையில் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதில்லை. அப்படி கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்களை ஏதேனும் தங்குமிடத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.